முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை தயவு செய்து விடுங்க: நலம் பெறுங்கள்

கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம்

மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்:

ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.

எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.

* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.

ஆரோக்கிய எடை:

உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.


மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது.இந்த 2010ம் ஆண்டில், "ஙிணிணூடு கடூச்ஞிஞு ஙிஞுடூடூணஞுண்ண்' என்பதே குறிக்கோள். அதாவது பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.
* நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.


இந்த பதிப்பு : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=93355


நன்றியுடன்

வசந்த்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னை கவர்ந்த கவிதை,... (சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து) அம்மா. உன்னை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் நேசநதி அருவியாய் அவதாரமெடுக்கிறது. மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய் விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய். பசி என்னும் வார்த்தை கூட நான் கேட்டதில்லை நீ பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் . என் புத்தகச் சுமை முதுகை அழுத்தி அழுதபோது செருப்பில்லாத பாதங்களேடு இடுப்பில் என்னை இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய். அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அன்பின் அகராதியை எனக்கு அறிமுகப் படுத்தியது என் தலை கோதிய உன் விரல்களல்லவா ? எனது சிறு சிறு வெற்றிகளுக்கு கோப்பைகள் கொடுத்தது உனது இதயத் தழுவலும் பெருமைப் புன்னகையுமல்லவா ? வேலை தேடும் வேட்டையில் நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது ஆறுதல் கரமானது உனது ஆறுவரிக் கடிதமல்லவா ? எனக்கு வேலை கிடைத்தபோது நான் வெறுமனே மகிழ்ந்தேன் நீதானே அம்மா புதிதாய்ப் பிறந்தாய் ? உனக்கு முதல் சம்பளத்தில் வாங்கித்தந்த ஒரு புடவையை விழிகளின் ஈரம் மறைக்க கண்களில் ஒற்றிக்...

எங்கள் தமிழ் குனம்

உலகினை போல் வாழ வேண்டுமே உண்மை மட்டும் வாழ வேண்டுமே கனவுகள் கை கூட வேண்டுமே வெல்லும் கோபம் கூட வேண்டுமே எனக்கென புது பூமி வேண்டுமே தமிழ் தான் அங்கே வேண்டுமே தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே எச்சில் இதயம் மாற வேண்டுமே அடடா இது நடக்குமா என் பூமி எனக்கு கிடைக்குமா ஒ அது வரை நெஞ்சம் பொறுக்குமா என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஒ அகம் புறம் என இரண்டும்மிருக்குதே அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம் அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில் எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குனம்.