முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சொந்த ஊரின் நியாபகம்

வெயில் காலத்துல ஊருல இருக்கிறது புடிக்கும் ஏன்னா அங்க இளநி, நொங்கு, பதனி, வெள்ளரி காய், வெள்ளரி பழம், தர்புசனி பழம் வெயிலுக்கு எல்லாம் கிடைக்கும் அப்பறம் சொந்தகாரங்க (அத்தை பொண்ணு மாமன் பொண்ணு ;) ) வீட்டுக்கு வருவாங்க இதுல்லாம் விட்டுட்டு பணம் சம்பாதிக்க வெளிநாட்டு முதலாளிகளுக்காக வேலை செஞ்சிகிட்டு இருக்கேன் கீழ இருக்க கவிதைய படிங்க உங்களுக்கும் புடிக்கும். இப்பக்கத்தில் பிழை உள்ளதா? கருத்துரையிடுக நன்றி !
சமீபத்திய இடுகைகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னை கவர்ந்த கவிதை,... (சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து) அம்மா. உன்னை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் நேசநதி அருவியாய் அவதாரமெடுக்கிறது. மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய் விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய். பசி என்னும் வார்த்தை கூட நான் கேட்டதில்லை நீ பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் . என் புத்தகச் சுமை முதுகை அழுத்தி அழுதபோது செருப்பில்லாத பாதங்களேடு இடுப்பில் என்னை இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய். அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அன்பின் அகராதியை எனக்கு அறிமுகப் படுத்தியது என் தலை கோதிய உன் விரல்களல்லவா ? எனது சிறு சிறு வெற்றிகளுக்கு கோப்பைகள் கொடுத்தது உனது இதயத் தழுவலும் பெருமைப் புன்னகையுமல்லவா ? வேலை தேடும் வேட்டையில் நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது ஆறுதல் கரமானது உனது ஆறுவரிக் கடிதமல்லவா ? எனக்கு வேலை கிடைத்தபோது நான் வெறுமனே மகிழ்ந்தேன் நீதானே அம்மா புதிதாய்ப் பிறந்தாய் ? உனக்கு முதல் சம்பளத்தில் வாங்கித்தந்த ஒரு புடவையை விழிகளின் ஈரம் மறைக்க கண்களில் ஒற்றிக்...

The Children of Heaven

'Children of Heaven' இத் தி ரை க்கவியத்தை செப்டம்பர் 28 ஆம் நாள் பார்த்தேன் என்னை மிகவும் சந்தோச படுத்திய நாளும் இதுவே அழவைத்த நாளும் இதுவே எனது சிறுவயதின் சில நிகழ்வுகளை என்னக்கு காண்பித்த நல்ல திரைகவியம் முடிந்தால் நீங்களும் பாருங்கள்! இத் திரைப்படம் பல்வேறு உலகத் திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம். கோயிலில் அல்லது திருமண மண்டபத்தில் தொலைத்துவிடுவோமோ என்று நாம் கழற்ற யோசிக்கும் ஒரு 'காலணி(ஷூ)'தான் திரைப்படத்தின் கதாநாயகன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம், அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், சிறுமியையும் பற்றிக் கூறுகிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது. 1997-ம் வருடம் 'மான்டர் உலகத் திரைப்பட விழா'வில் நான்கு விருதுகளைப் பெற்றதுடன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய திரைப்படமும் இதுவே.

எனக்கு பிடித்ததும் ரசித்ததும்

6 மணிக்கு முன்பு முழிப்பு சோழ கருது சக்கையில் குளிர் காய்வது காலையில் தாத்தா வீட்டு பழைய சோறு பள்ளிக்கு 1 ரூபாய்க்கு இட்லி 20பைசா நொறுக்கு தினிக்கு தேன்மிட்டாய், சூச்பறி, மைசூர் பக்கு, கடலை மிட்டாய், சினி மிட்டாய் இலந்தை பழம், கரப் பழம், இச்சம் பழம், குச்சி ஐஸ், பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், சேமிய ஐஸ், பஞ்சமிருத ஐஸ் காக்கா கடி மிட்டாய் பம்பரம் கோலி குண்டு மணல் வீடு கிச்சி கிச்சி தம்பலம் நொண்டி, பாண்டி கல்லு கூட்டாஞ்சோறு கபடி(மண்ணோட விளையாட்டு) ஐஸ்பைஸ் விளையாட்டு இரவு நேர கண்ணாமூச்சி நொங்கு வண்டி தென்னை மட்டை காத்தடி உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய் கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி பொண்வண்டு பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது பலசரக்கு வியாபாரியின் வண்டியில் நண்பர்களுடன் களவாண்ட சூச்பறி பொட்டலம் மாட்டு வண்டி பயணங்கள் மாட்டை குளிப்பாட்டுவது மாட்டு கொட்டகை சுத்தப்படுத்துவது சந்தை யில் பொங்கல் கரும்பு விற்பது பொங்கலுக்கு ஒருவாரம் முன்பு மாட்டுக்கு சலங்கை கட்டி ரசிப்பது பொங்கலுக்கு போட்டி போட்டு கொண்டு மாட்டை அழகுபடுத்துவது இரவு நேர போதுக் கூட்டம் 10 ஆண்டுகளுக்கு முண்டு...

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை தயவு செய்து விடுங்க: நலம் பெறுங்கள்

கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம் மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்: ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொற...

ஹோலோ கிராபிக் செய்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறப்பு வீடியோ

அலைபேசிக்கு செய்தி படித்து பார்த்திருப்போம் ஆனால் அனுப்பியவரே செய்தியை நம் கண் முன்னால் நேரடியாக கூறினால் எப்படி இருக்கும் ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தின் மூலம் இது சாத்தியம் தான் இதைப் பற்றிய சிறப்புப் பதிவு வீடியோவுடன். தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சியின் வெளிப்பாடு தான் ஹோலோ கிராபிக் மெசேஸ், அதாவது நமக்கு செய்தி அனுப்புவர் முப்பரிமானத்தில் நம் கண் முன் வந்து செய்தி சொல்வதை தான் ஹோலோ கிராபிக் மெசேஸ் என்கிறோம். எந்த மாய வேலையும் செய்யாமல் நேரடியாக நம் கண் முன் வந்து காட்சி கொடுப்பது அதிசயமான விருந்தை நம் கண்களுக்கு காட்டுகிறது. இதன் சோதனை முயற்சி தற்போது வெற்றி அடைந்திருக்கிறது. சோதனைக்காக அனுப்பிய ஹோலோ கிராபிக் மெசேஸ் பற்றிய அரிய வகை சிறப்பு வீடியோவை இத்துடன் இணைத்துள்ளோம். 2012 ஆம் ஆண்டில் இந்த ஹோலோ கிராபிக் மெசேஸ் நாம் பயன்படுத்தும் வண்ணம் முழுமை அடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.