முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கு பிடித்ததும் ரசித்ததும்

6 மணிக்கு முன்பு முழிப்பு
சோழ கருது சக்கையில் குளிர் காய்வது
காலையில் தாத்தா வீட்டு பழைய சோறு
பள்ளிக்கு 1 ரூபாய்க்கு இட்லி
20பைசா நொறுக்கு தினிக்கு
தேன்மிட்டாய், சூச்பறி, மைசூர் பக்கு, கடலை மிட்டாய், சினி மிட்டாய்
இலந்தை பழம், கரப் பழம், இச்சம் பழம்,
குச்சி ஐஸ், பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், சேமிய ஐஸ், பஞ்சமிருத ஐஸ்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
மணல் வீடு
கிச்சி கிச்சி தம்பலம்
நொண்டி, பாண்டி கல்லு
கூட்டாஞ்சோறு
கபடி(மண்ணோட விளையாட்டு)
ஐஸ்பைஸ் விளையாட்டு
இரவு நேர கண்ணாமூச்சி
நொங்கு வண்டி
தென்னை மட்டை காத்தடி
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
பலசரக்கு வியாபாரியின்
வண்டியில் நண்பர்களுடன் களவாண்ட சூச்பறி பொட்டலம்
மாட்டு வண்டி பயணங்கள்
மாட்டை குளிப்பாட்டுவது
மாட்டு கொட்டகை
சுத்தப்படுத்துவது
சந்தையில் பொங்கல் கரும்பு விற்பது
பொங்கலுக்கு ஒருவாரம் முன்பு மாட்டுக்கு சலங்கை கட்டி ரசிப்பது
பொங்கலுக்கு போட்டி போட்டு கொண்டு மாட்டை அழகுபடுத்துவது
இரவு நேர போதுக் கூட்டம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை (முருகன் திரையரங்கம், சண்முகா திரையரங்கம்).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னை கவர்ந்த கவிதை,... (சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து) அம்மா. உன்னை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் நேசநதி அருவியாய் அவதாரமெடுக்கிறது. மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய் விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய். பசி என்னும் வார்த்தை கூட நான் கேட்டதில்லை நீ பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் . என் புத்தகச் சுமை முதுகை அழுத்தி அழுதபோது செருப்பில்லாத பாதங்களேடு இடுப்பில் என்னை இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய். அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அன்பின் அகராதியை எனக்கு அறிமுகப் படுத்தியது என் தலை கோதிய உன் விரல்களல்லவா ? எனது சிறு சிறு வெற்றிகளுக்கு கோப்பைகள் கொடுத்தது உனது இதயத் தழுவலும் பெருமைப் புன்னகையுமல்லவா ? வேலை தேடும் வேட்டையில் நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது ஆறுதல் கரமானது உனது ஆறுவரிக் கடிதமல்லவா ? எனக்கு வேலை கிடைத்தபோது நான் வெறுமனே மகிழ்ந்தேன் நீதானே அம்மா புதிதாய்ப் பிறந்தாய் ? உனக்கு முதல் சம்பளத்தில் வாங்கித்தந்த ஒரு புடவையை விழிகளின் ஈரம் மறைக்க கண்களில் ஒற்றிக்...

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! 'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

The Children of Heaven

'Children of Heaven' இத் தி ரை க்கவியத்தை செப்டம்பர் 28 ஆம் நாள் பார்த்தேன் என்னை மிகவும் சந்தோச படுத்திய நாளும் இதுவே அழவைத்த நாளும் இதுவே எனது சிறுவயதின் சில நிகழ்வுகளை என்னக்கு காண்பித்த நல்ல திரைகவியம் முடிந்தால் நீங்களும் பாருங்கள்! இத் திரைப்படம் பல்வேறு உலகத் திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம். கோயிலில் அல்லது திருமண மண்டபத்தில் தொலைத்துவிடுவோமோ என்று நாம் கழற்ற யோசிக்கும் ஒரு 'காலணி(ஷூ)'தான் திரைப்படத்தின் கதாநாயகன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம், அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், சிறுமியையும் பற்றிக் கூறுகிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது. 1997-ம் வருடம் 'மான்டர் உலகத் திரைப்பட விழா'வில் நான்கு விருதுகளைப் பெற்றதுடன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய திரைப்படமும் இதுவே.