முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்பாருங்கள்- உங்களிடம் மட்டும்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றங்களும் குறைவாக இருக்கும் என்ற பழமொழி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. எதிர்பார்ப்புகள் இருக்கையில் அதற்கு எதிர்மாறாக என்ன நடந்தாலும், யார் நடந்து கொண்டாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கசப்பையே எதிர்பார்ப்பின் பலனாக நாம் காண நேர்கிறது. எத்தனையோ விதங்களில் நடந்ததும் மற்றவர் நடந்து கொண்டதும் சிறப்பாக இருந்தாலும் நம் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாக நடந்த சிறு சிறு விஷயங்கள் அந்த சிறப்பு அம்சங்களை ரசிக்க விடாமல் மனம் சிணுங்க வைக்கிறது. இப்படி செய்திருக்கக்கூடது, அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று மனம் விமரிசித்துக் கொண்டே இருக்கையில் நன்றாக நடந்த மற்ற விஷயங்களை நாம் கவனிக்கவும் மறந்து விடுகிறோம். எனவே எதிர்பார்க்காமல் இருக்கும் போது நடப்பதை ஏற்றுக் கொள்வது எளிதாகிறது. அப்படி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறும் போது எல்லா சூழ்நிலைகளிலும் மன அமைதியுடன் இருக்கவும் செயல்படவும் முடிகிறது. மார்கஸ் அரேலியஸ் என்ற ரோமானியப் பேரரசர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அவர் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் "இன்று நான் எல்லா தரப்பட்ட மோசமான மனித...

தமிழின் பெருமை

1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thouand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 10000000000000000 = வெல்லம் -ten zillion 100000000000000000 = அன்னியம் -hundred zillion 1000000000000000000 = அர்த்தம் -? 10000000000000000000 = பரார்த்தம் --? 100000000000000000000 = பூரியம் -? 1000000000000000000000 = முக்கோடி -? 10000000000000000000000 = மஹாயுகம் -?